Wednesday, February 26, 2014

நாட்டுக் கோழி வளர்ப்பு - 1






நாட்டுகோழி வளர்ப்பின் நன்மைகள்

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டுமேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும்நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காகமட்டுமில்லாமல்கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது

நாட்டுக்கோழிகளை ஏழைகள்பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம்பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணைஎஞ்சியுள்ள தீவனப்பொருட்கள்வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறதுஅதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறதுஎனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும்வளரக்கூடியதுசந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாகதேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில்அவசர பணத்தேவையைபூர்த்தி செய்யும் தொழில்அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதுசுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில்கிராமப்புறபெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்புநாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மைகுஞ்சுகளைபாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்.

நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளனஅவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.

குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,

கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,

கொண்டைக்கோழி,

குட்டைக்கால் கோழி.

உயர்ரக நாட்டுக்கோழி இனம்

நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர்ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்பெங்களூருகால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளை உற்பத்திசெய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.


கோழிகள் தேர்வு:
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடைவேகமான ஓட்டம்தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல்,சில நேரங்களில் கொக்கரித்தல்கூவுதலுமாக இருக்க வேண்டும்பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும்நல்ல அகலமான நெஞ்சம்நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள்நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும்கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும்நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லதுதேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும்தீவனத் தொட்டியில் போதுமான இடவசதிகோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில்தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும்தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்புகோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும்சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும்அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாதுதீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்

நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம்போதுமான நிழல்பசுந்தீவனம்தீவனம்தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலைதழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.

"மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் பயிற்சி மைய தலைவர் மற்றும் துணைப்பேராசிரியர் பீர் முகமதுவிடம்நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றி கேட்டபோது, "பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்குஆனாலேயர்பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும்கம்பெனித் தீவனங்களில் வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி விடுறதுக்காக சிலவேதிப்பொருட்கள கலக்குறாங்கஅதனால பல பிரச்னைகள் வருதுன்றது எல்லோருக்குமே தெரியும்கம்பெனித்தீவனத்தைச் சாப்பிடுற எந்தக் கோழியா இருந்தாலும்அதுங்களுக்கு ரசாயன பாதிப்பு இருக்கத்தான் செய்யும்அந்தக்கோழி கறியைச் சாப்பிடற மனிதர்களுக்கும் பாதிப்புகள் வரத்தான் செய்யும்அதில்லாம நாட்டுக் கோழிகளுக்கு நோய்த்தாக்குதல் இருக்காதுங்கிறது சரிதான்ஆனாமேய்ஞ்சுதிரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது.மொத்தமா அடைச்சு வெச்சாகண்டிப்பா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும்அப்புறம் அதுக்கான மருந்துஊசினுபோடறப்ப... பழையபடி பிராய்லர் கோழி கணக்காத்தான் இருக்கும்இயற்கைச் சூழல்ல மேயவிட்டு வளர்த்தாதான் அதுமுழுமையான நாட்டுக் கோழிமண்ணைக் கிளறிகரையான்புழு பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டு வளர்றகோழிகளுக்குத்தான் இயற்கையான சுவை இருக்கும்தோட்டங்கள்ல விவசாயத்தோட உபத் தொழிலா நாட்டுக் கோழிவளர்ப்பையும் விவசாயிகள் செய்தா... போதுமான அளவுக்கு நாட்டுக் கோழிங்க கிடைக்க ஆரம்பிச்சுடும்கிராமங்கள்லவீட்டுக்கு வீடு வளர்க்கலாம்புறக்கடை முறையில வீட்டுக்குவீடு நாட்டுக் கோழிங்க வளர்க்குறதை எங்க துறை மூலமாஊக்கப்படுத்திக்கிட்டிருக்கோம்கொஞ்சம் பெரிய அளவுல வளர்க்கணும்னு நினைக்கறவங்கதனித்தனியா 75 சதுரடிஇருக்குற கொட்டகைகள்ல, 10 பெட்டைக்கு 2 சேவல்ங்கிற விகிதத்துல வெச்சு நாமளே தீவனத்தைத் தயார் பண்ணிக்கொடுத்து வளக்கலாம்அந்தக் கோழிகள் மேயுறதுக்காக வலை அடிச்சு கொஞ்ச இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம்.அப்பதான் தரமான நாட்டுக் கோழிகளை உருவாக்க முடியும்இந்த முறையில அடை வெச்சே வருஷத்துக்கு எண்ணூறுகுஞ்சுகளை உற்பத்தி பண்ண முடியும்இதுபத்தின தொழில்நுட்பம் தேவைப்படுறவங்க எங்க ஆராய்ச்சி மையத்துக்குவந்து தெரிஞ்சுக்கலாம்என்று அழைப்பு வைத்தார்.

ஆடுபிராய்லர் கோழிமீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும்அசைவ பிரியர்கள் அதிகம்விரும்புவது நாட்டுக் கோழியை தான்அதன் சுவையே தனிபண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன்வளர்த்தால்நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாகஇயக்குனர் பாலுஅவர் கூறியதாவதுநாட்டுக்கோழிகளின் முட்டைஇறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளதுஆனால்தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லைகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாகமேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பதுவழக்கம்விற்பதற்காக வளர்க்காமல்தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்இதையே தொழிலாக செய்தால் நல்லபார்க்கலாம்.
கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில்நாட்டுக்கோழி வளர்க்கலாம்தினசரி காலை 2 மணி நேரம்மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும்.நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்முட்டையாக வாங்கிகருவிகள்மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின்,அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும்பராமரிப்பு முறைகள் பண்ணை வைக்கும்இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாதுஅந்நிய பறவைகள் மூலம்தான்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளதுபண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாதுசெடிகொடிகள்இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லதுபண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல்பார்த்துக் கொள்ள வேண்டும்கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால்மற்ற சத்தங்கள்கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம்எடை அதிகரிக்க குஞ்சுகளின்வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்கேரட்பெரியவெங்காயம் போன்றவற்றைபொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையைபொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம்இதனால் தீவனச்செலவு குறையும்கறியின்ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?
அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால்வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும்குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காகவளையத்துக்குள்ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும்வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்புமூன்றும்குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும்வட்டத்துக்குள் 2 இஞ்ச்உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பிஅதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும்அதனுள் தீவனத்தொட்டிமற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும்அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம்தினசரி பேப்பரை மாற்றவேண்டியது அவசியம்அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர்நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்றவேண்டும்அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல்இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும்இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும்.
கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாககுஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும்இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும்மொத்தமாக 80 நாட்கள்பூர்த்தியானதும்சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம்கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள்வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
குஞ்சு பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்குதகுதியற்றதுஇதர முட்டைகளில் எடை குறைவுஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும்மற்றமுட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 18 நாட்கள் 99.6 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 70 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம்உள்ளவாறு வைக்க வேண்டும்ஒரே நேரத்தில் 10 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம்பின்னர் கேட்சர் மெஷினில் 3நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.

4 comments:

  1. எங்களிடம் தரமான நாட்டுகோழி மற்றும் நாட்டுகோழி குஞ்சுகள் கிடைக்கும் . தொடர்புக்கு: SHREE AMMAN POULTRY-9952831890

    ReplyDelete
  2. nattukozhi valarpil mealworm valarthu kodukka virumbugiren uthavaum

    ReplyDelete
  3. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

    ReplyDelete