Wednesday, December 7, 2016

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை சைலேஜ் – ‘தீவன ஊறுகாய்’

கோடைக்காலத்தில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க பசுந்தீவனம் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அதனை ஊறுகாய்ப் புல்லாக மாற்றி சேமித்து வைப்பதன் மூலம் கோடைக்காலங்களில் பசுந்தீவனமாகப் பயன்படுத்தலாம். மர இலைகளைத் தீவனமாகக் கொடுக்கலாம்.
ஊறுகாய்ப்புல் என்றால் என்ன? எவ்வாறு தயார் செய்வது?
பசும்புல்லினைப் பசுமை மாறாமல் காற்றுப்புகாத சூழலில் நொதித்தல் முறையில் சேமித்து வைக்கும் முறையே ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறையாகும்.  இம்முறையில் ஒரு பாலித்தீன் பையினுள் பசும்புல்லானது சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு வெல்லப்பாகுக் கரைசல், உப்புக்கரைசல் மற்றும் யூரியாக் கரைசல் தெளிக்கப்பட்டுக் காற்று இல்லாத அளவிற்குப் புல்லினை நன்கு அழுத்தி பாலித்தீன் பையினை இறுகக் கட்டிவிட வேண்டும். கட்டப்பட்ட பையினை 21-28 நாள்கள் திறக்காமல் வைத்துவிடவேண்டும். இந்த 28 நாள்களில் பசும்புல்லானது ஊறுகாய்ப்புல்லாக மாறிவிடும்.  பாலித்தீன் பையினை 28 நாள்களுக்கு பிறகு திறக்கும்பொழுது பசும்புல் பொன் நிறமாக மாறி இருக்கும். மேலும், பழவாசனை புல்லிலிருந்து வரும், ஊறுக்காய்ப்புல் தயாரிப்பது குறித்த விரிவான செயல்முறையினை அருகிலுள்ள கால்நடை மருத்துவர் அல்லது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின விரிவாக்க மையங்களை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.
கறவைமாடுகளுக்குக கோடைக்காலம் மற்றும் குளிர்க்காலம் ஆகியவற்றில் ஓரே மாதிரியான தீவனங்களை கொடுக்கலாமா?
கறவைமாடுகளுக்குக் கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் ஓரே மாதிரியான தீவனங்களைக் கொடுக்கக் கூடாது.  கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மாடுகள் அடர்தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே, உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகளின் உடல் வெப்பநிலையினைப் பராமரிப்பதற்கு அதிக எரிசக்தி தேவைப்படும். எனவே எரிசக்தி அதிகமுள்ள (மக்காச்சோளம்) தீவனத்தினை அதிகமாகக் கொடுக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகள் உட்கொள்ளும் அடர்தீவனத்தின் அளவு அதிகரித்துக் காணப்படும்.

மர இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகள்

மாடுகளுக்கு மரஇலைகளைத் தீவனமாகக் கொடுக்காலம்.  மரஇலைகள் கோடைக்காலத்தில் பசுந்தீவனத்திற்கு மாற்றாக இருக்கும். ஆனால் பசுந்தீவனத்தின் மொத்த அளவினை மர இலைகளைக் கொண்டு ஈடுசெய்ய முடியாது. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 5 கிலோ மர இலைகளைத் தீவனமாக கொடுக்கலாம். மரஇலைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.  மரஇலைகளில் சில எதிர் ஊட்டச்சத்துக் காரணிகளாகிய டேனின், சுப்போனின் மற்றும்  நிம்பின் இருப்பதால் மரஇலைகளை மாடுகளுக்கு அதிகம் கொடுக்கக் கூடாது. ஆதிகமாக மர இலைகளை மாடுகளுக்குக் கொடுக்கும் பொழுது மாடுகளில் வயிறு உப்பசம் மற்றும் அஜிரணக் கோளாறுகள் ஏற்படும்.

கோடைக்காலங்களில் மாடுகள் தீவனம் உண்பதில் ஏற்படும் அளவுக் குறைவினை சரி செய்யும் முறை
கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும்.  கோடைக் காலத்தில் மாடுகள் அடர் தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்துகளின் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும்.
கறவைமாடுகளுக்கு அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனங்களை எவ்வளவு கொடுக்க வேண்டும்?  எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்?
உதாரணமாக பால் கொடுக்கும் மாட்டிற்கு ஒவ்வொரு 1 லிட்டர் பாலுக்கும் 400 கிராம் அடர்தீவனமும், 2 கிலோ பசும்புல்லும் மற்றும் 1 கிலோ வைக்கோலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். மேற்கூறிய அளவு அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். பசும்புல் மற்றும் வைக்கோலை எந்த நேரத்திலும் கொடுக்கலாம்.
கோடைக்காலத்தில் கறவைமாடுகளுக்கு எவ்வாறு தண்ணீர் கொடுக்க வேண்டும்?
எல்லா நேரத்திலும் குளிர்ச்சியான தண்ணீரை மாடுகளுக்கு கிடைக்கச் செய்வது மிகவும் அவசியம். தண்ணீரானது உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் கழிவுகளை வெளியேற்ற இன்றியமையாத ஓர் ஊடடச்சத்தாகும். போதிய தண்ணீரை மாடுகளுக்குக் கொடுக்கவிலையென்றால் மாடுகளின் உடல் வளர்ச்சி மற்றும் பல் உற்பத்தி பாதிக்கப்படும்.  எனவே தண்ணீரைச் சரியான முறையில் கொடுப்பது இன்றியமையாததாகும்.
மாடுகளின் தீவனத்தில் உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டுமா? எவ்வளவு சேர்க்க வேண்டும்?
மாடுகளின் தீவனத்தில் உப்பினைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். உப்பில் சோடியம் மற்றும் குளோரைடு என்ற இரண்டு தாது உப்புகள் இருக்கின்றன.  உடலில் உள்ள செல்களில் இவ்விரு தாது உப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும், இத்தாது உப்புகள் உடலில்  சவ்வூடுவரவல் சரியாக நடைபெற உதவுகின்றன. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 30 கிராம் உப்பினைத் தீவனத்துடன் கொடுக்க வேண்டும்.
தாதுப்புக் கலவை என்றால் என்ன? தாதுப்புக் கலவையினை மாடுகளுக்கு எப்பொழுது கொடுக்க வேண்டும்?
கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு தாதுப்புக்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ள கலவை தாதுப்புக் கலவை எனப்படும். தாதுப்புக் கலவையினை அன்றாடம் கால்நடைகளுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும். பால் கொடுக்காத மாடுகளுக்கு நாளொன்றிற்கு  50 கிராமும், கன்றுகளுக்கு நாளொன்றிற்கு 10-15 கிராமும் கொடுக்க வேண்டும்.

உலர்தீவனம் உட்கொள்ளும் அளவினை அதிகரிகக செய்யும் முறைகள்

  • உலர்தீவனங்களைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.
  • உலர்தீவனத்துடன் வெல்லப்பாகு மற்றும் உப்பு கரைசலினைத் தெளிக்கலாம்.
  • 1 கிலோ வெல்லத்தினையும் 1 கிலோ உப்பினையும் 4 லிட்டர் தண்ணீரில் கரைத்து உலர்தீவனத்தின் மீது தெளித்துப் பயன்படுத்தலாம்.
  • கறவை மாடுகளுக்கு நாளொன்றிற்கு 50 கிராம் இட்டு சோடா அல்லது ஆப்ப சோடாவைக் கொடுப்பதன் மூலம் தீவனச் செரிமானத்தினை அதிகரிக்கலாம்.
  • கன்றுகளின் தொழுவத்தில் உப்பு கட்டி மற்றும் தாது உப்புக் கட்டிகளைக் கட்டாயம் தொங்கவிட வேண்டும்.
செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்குக் கோடைக்காலத்தில் கூடுதல் அடர்தீவனம் தேவையா?
கோடைக்காலத்தில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்குப் போதிய அளவு ஊட்டச்சத்துகள் மேய்ச்சல் மூலம் கிடைக்காது. எனவே செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு மாலை நேரங்களில் ஊறவைத்த மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும். 25 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு 100 – 150 கிராம் மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். 35 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு 200 – 250 கிராம் மக்காச்சோளம் அல்லது அடர்தீவனத்தைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதால் ஆடுகளில் எடை குறைவு ஏற்படுவதைத் தடுக்கலாம். நல்ல உடல் எடையை அடையலாம்.  தாய் ஆடுகளின் பால் உற்பத்தி குறையாமல் தடுக்கலாம். இது தவிர மாலை நேரங்களில் புரதச்சத்து அதிகமுள்ள கடலைக்கொடி உளுத்தம் பொட்டு மற்றும் துவரைத் தொளும்புகளை ஆடுகளுக்கு கொடுக்கலாம். மேய்ச்சலுக்குச் செல்லாத குட்டிகளுக்கு மரஇலைகளைத் (வேப்பிலை, அகத்தி, சவுண்டல் மற்றும் கிளைரிசிடியா) தீவனமாகக் கொடுக்கலாம்.   கருவேலங்காயினை ஊறவைத்து அல்லது அரைத்து கொடுக்கலாம்.

கோடைக்காலத்தில் செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை வளர்போர் செய்ய வேண்டியவை


  • கொட்டகையில் உப்புக்கட்டி மற்றும் தாது உப்புக் கட்டிகளைக் கட்டாயம் தொங்கவிட வேண்டும்.
  • நண்பகல் நேரத்தில் (மதியம் 1-4 மணி வரை) ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.
  • ஆடு மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் தண்ணீர்த் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
  • ஆடுகளைக் குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் குடிக்கக் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.
  • குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் குடிப்பதால் ஆடுகளுக்கு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.

5 comments:

  1. Its the short and sweet information,I learned some information in your blog
    928bet

    ReplyDelete
  2. Great post. I have just started built one for myself.bk8

    ReplyDelete
  3. thank for the great share this is the best blog that I never find anywhere
    sagame66
    sagame77
    sagame88

    ReplyDelete
  4. Would like to appreciate your efforts to impart content so beautifully. Its true if you trade in stock market by getting stock market tips from experts, Chances are higher you will end up in profit. share market tips provided by expert are well timed and well researched.

    ReplyDelete