ஒரு வருடத்தில் 45 கிலோ எடை.
பிஸியோதெரபியிலிருந்து ஆடு வளர்ப்புக்கு!
அதிக எடைக்கு போயர் ஆடுகள்!
வருடத்துக்கு 450 குட்டிகள்.சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தாலும் சரி... பெரு விவசாயிகளாக இருந்தாலும் சரி... அவர்களுக்கு ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். அதிலும் குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். தற்போது விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் சுருங்கிக் கொண்டே வரும் சூழ்நிலையில், 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு’ விவசாயிகளிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளைக் கலப்பினம் செய்து, கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.

''எங்கப்பா, பால் பண்ணை வெச்சுருந்தார். அதனால, எனக்கு சின்ன வயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல ஈடுபாடு அதிகம். ஆனா, சூழ்நிலையால பிசியோதெரபி படிச்சுட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அதுல கிடைச்ச வருமானம்... திருப்தியா இல்லை. அதனால, தொழிலை மாத்தலாம்னு யோசிப்பதான், 'ஆடு வளக்கலாம்'னு தோணுச்சு. உடனே அது சம்பந்தமான விஷயங்களைத் தேடி அலைய ஆரம்பிச்சேன். அப்போதான் கொட்டில் முறை பத்தியும், கலப்பினங்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஆடு வளர்ப்புல இறங்கிட்டேன்' என்று உற்சாகமாக ஆரம்பித்த வெங்கடேசன், தொடர்ந்தார்.
பிஸியோதெரபியிலிருந்து ஆடு வளர்ப்புக்கு!
அதிக எடைக்கு போயர் ஆடுகள்!

'போயர் ரக ஆடுதான் சீக்கிரமாவே அதிக எடைக்கு வந்துடும்னு சொன்னாங்க. அதனால மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து ஒரிஜினல் போயர் ரகத்துல 18 பெட்டைகளையும், 2 கிடா ஆடுகளையும் வாங்கிட்டு வந்தேன். அதோட தலைச்சேரி, சிரோஹி, கன்னியாடு, கொடியாடு ரக பெட்டைகளையும் வாங்கினேன். ஒவ்வொரு இனத்தோடயும் போயர் கிடாக்களைக் கலப்பு செஞ்சு பாத்ததுல, தலைச்சேரி இனத்தோட கலப்பு செஞ்சு பிறந்த குட்டிக மத்ததுகளவிட சாதுவாவும் ஆரோக்கியமாவும் இருந்துச்சு. அதோட ஒரே ஈத்துல மூணு குட்டிக வரைக்கும் பிறந்துச்சு. அதனால மத்த இனங்களையெல்லாம் ஒதுக்கிட்டு, 100 தலைச்சேரி பெட்டைகளை மட்டும் வாங்கினேன். இப்போ போயர் கிடா, தலைச்சேரி பெட்டைகளை மட்டும் கலந்து கலப்பினக் குட்டிகளை பெருக்கிட்டிருக்கேன். தனியா, சுத்தமான போயர் ரகத்தையும் பெருக்கிட்டிருக்கேன்.





