Friday, November 14, 2014

ஜீரோ பட்ஜெட்டுக்கு ஜே... ! வெளிநாடுகளை வியக்கவைத்த ஜீவாமிர்த மகத்துவம்!

பாரத பூமியில் பரவலாக வேர்-விட்ட ஜீரோ பட்ஜெட் விவசாய முறை, இன்று கடல் கடந்து பல நாடுகளிலும் வலுவாக வேர்விடத் தொடங்கிவிட்டது.

மகாராஷ்டிராவில் கருவாகி உருவாகி, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா என்று தவழ ஆரம்பித்து... இன்றைக்கு இலங்கை, நேபாளம், இந்தோனேஷியா, கொரியா, தாய்லாந்து, தென் அமெரிக்கா... என்று உலக நாடுகள் பலவற்றிலும் தழைத்தோங்க ஆரம்பித்துவிட்டது.

ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தில் வெற்றிக்கொடி பறக்க விட்டுக் கொண்-டிருக்கும் கர்நாடக மாநிலம் நோக்கி, மேற்-கண்ட நாடுகளில் இருந்தெல்லாம் நவம்பர் முதல் வாரத்தில் வந்து சேர்ந்த விவசாயிகளை, கைப் பிடித்து, பண்ணைகள் தோறும் அழைத்துச் செல்லும் பொறுப்பாளர்களில் நானும் ஒருவானாகிப் போனேன்.

ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை, கைப் பிடித்து தமிழகம், கேரளா... ஏன் கடல் கடந்து இலங்கையிலும் உலாவவிட்ட பெருமை பசுமை விகடன் இதழுக்கு உண்டு. மட்டகளப்பில் இருக்கும் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பசுமை விகடனின் வாசகர்கள். அவர்கள் மூலமாக ஜீரோ பட்ஜெட் பற்றி அறிந்த டாக்டர். லயோனல் வீரகோன், திருவண்ணாமலையில் நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அதன் அருமை பெருமைகளை நேரில் கண்டுகொண்டார். அதையடுத்து--தான், இலங்கையிலும் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்தார்.

கடந்த ஆண்டு, இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச விவசாயிகள் அமைப்பு  சார்பில், விவசாய உயிரியல் சூழல் பற்றிய கருத்தரங்கம் நடை-பெற்றது. அதில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர்கள், தங்கள் நாட்டின் உயிரியல் சூழல், இயற்கை விவசாயம் பற்றி விவாதித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சுபாஷ் பாலேக்கர், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய சித்தாந்தம் பற்றி அந்த ஐந்து நாள் கருத்தரங்கில் தினமும் இரண்டு மணி நேரம் விரிவாகவே எடுத்து வைத்தார்.

பயிற்சி எடுக்க வந்த பல நாட்டு விவசாயிகள்!
அந்தக் கருத்தரங்கில், பலமான விவாதங்களுக்குப் பிறகு, ஜீரோ பட்ஜெட் விவசாயத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்-கொண்டனர் உலகளாவிய விவசாயி--களும், விஞ்ஞானிகளும்! இதையடுத்து, ‘கடனே இல்லாத விவசாயமா..! கடன் தொல்லை இல்லாமல் சுதந்திரமாக... விவசாயி--களால் சுவாசிக்க முடியுமா!’ என்றெல்-லாம் பரவிய ஆச்சர்ய அலை... ஆசியா, ஐரோப்பா, தென்அமெரிக்கா என்று உலகின் பலபாகங்களிலும் விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி-யுள்ளது.

இந்நிலையில்தான், ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பண்ணைகளை நேரில் பார்வையிட, பல நாடுகளைச் சேர்ந்த 40 விவ-சாயிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தது சர்வதேச விவசாயிகள் அமைப்பு. நவம்பர் 2&ம் தேதியன்று பெங்களூரு வந்தவர்களை தென்னிந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வரவேற்று, ஜீரோ பட்ஜெட் பண்ணைகளைச் சுற்றிக் காட்டினர்.


ரோடுகளில் மட்டுமல்ல, காடு... கழனிகளிலும் மரங்கள் சூழ்ந்த பசுமை கிராமம் சிக்கமந்தகெரா (ஹாசன் மாவட்டம்). காவிரியின் உபநதியான ஹேமாவதி நதிக்கரையிலிருக்கும் இந்த கிராமத்தின் கர்நாடக ராஜ்ய ரத் சங்கத்தினர்... தாரை, தப்பட்டை முழங்க வெளிநாட்டு விவசாயி--களுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

10 சதவிகிதம் காடு!
முதலில் கால்பதித்தது... ஹேமாவதி நதிக்கரையில் அமைந்துள்ள, நந்தினி ஜெயராம் ஜீரோ பட்ஜெட் பண்ணைக்குள்தான். ‘காடுகளின் எச்சமும், மிச்சமும்தான் விவசாயம்’ என்கிற சித்தாந்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஜெயராம்-நந்தினி தம்பதி, தங்களின் 36 ஏக்கர் பூமியையும் பசுமை வனமாக மாற்றி வைத்துள்-ளனர்.

20 ஏக்கரில் தென்னை, 3 ஏக்கரில் பாக்கு, 4 ஏக்க--ரில் எண்ணெய் பனை... இன்னும் இன்னும் பல பயிர்கள். ஊடுபயிராக தேக்கு, மா, பலா, கொய்யா, ருத்ராட்சம் போன்ற மரங்-கள் ஓங்கி வளர்ந்து ஒன்றோடு ஒன்று உறவாடி... கை குலுக்கி கொண்டிருந்த காட்சி, வயலுக்குள் இருக்கி-றோமா... வனத்துக்குள் நுழைந்து விட்டோமா... என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது. மேய்ச்சலுக்காகவும், வீட்டுப் பயன்பாட்டுக்-காகவும் 5.5 ஏக்கர் நிலம், 60 ஆடுகள், 15 மாடுகள், மொத்த இடத்தில் 10% காடுகள் என நிலைத்த... நீடித்த விவசாயத்துக்கு வழிகாட்டியாக திகழ்கிறது ஜெயராமின் பண்ணை.

விவசாயி மட்டுமல்ல... போராளி!
ஓங்கி உயர்ந்து நிற்கும் ஒரு மரத்தின் மீது மரவீட்டை அமைத்திருக்கிறார்கள். அதில் அமர்ந்து கொண்டு, சுற்றிலும் உள்ள இயற்கையை துளித்துளியாக அள்ளிப் பருகலாம். அனைவரையும் உபசரித்த கையோடு வயலுக்கு அழைத்துச் சென்று பாடம் நடத்தத் தொடங்கினார் நந்தினி. இவர் இயற்கை விவசாயி மட்டுமல்ல. ஒரு விவசாய போராளியும் கூட. ஆம்... கர்நாடகம் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் நடைபெற்ற விவசாயப் போராட்டங்களில் பங்கெடுத்தவர்.

‘‘எல்லோரையும் போல நாங்களும் ரசாயன விவசாயம்தான் செய்து வந்தோம். ஆனால், 1989 ம் ஆண்டி-லிருந்து இயற்கைக்கு மாறிவிட்டோம். அதுபற்றி என் கணவர் கூறுவார்’ என நந்தினி முன்னுரை கொடுக்க... தொடர்ந்தார் ஜெயராம்.

மனதை மாற்றிய ரசாயனம்!
‘‘ஒரு முறை தக்காளி பயிர் செய்து இருந்தேன். செடி செழிப்பா வளர்ந்--தது. கூடவே... புழு, பூச்சிகள் கூட்டணி போட்டு வயலில் கும்மியடித்தன. ஒரு பழத்தைக்கூட முழுமையாக, சொத்தை இல்லாமல் பறிக்க முடிய-வில்லை. அனைத்து ரசாயனப் பூச்சிக்கொல்லிகளையும் அடித்தும் பயன் இல்லை. அப்போதுதான் ரசாயனத்துக்கு எதிரான எண்ணம் மனதில் எழுந்தது. அதன் பிறகு, தென்னையை நடவு செய்து விட்டேன்.

ரசாயன உரங்களுக்குப் பதிலாக பண்ணை உரங்களை அதிகப்படுத்-தினேன். ஆடு, மாடுகளின் எண்ணிக்-கையைக் கூட்டி-னேன். ரசாயன உரங்கள் இல்லாம-லேயே, மரங்கள் அதிக காய்களைக் கொடுத்தன. 2006 ம் ஆண்டு ஜீரோபட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்து-கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகுதான் விவசாயத்தின் சூட்சமங்கள் மெள்ள புரியத் தொடங்கின.

சிலிர்க்க வைத்த ஜீரோ பட்ஜெட்!
ஜீவாமிர்தத்தின் செயல்திறனைக் கண்டு சிலிர்த்துப் போனேன். அது-வரை பண்ணை உரங்களாக மாறிய நாட்டு மாட்டுச் சாணம், ஜீவாமிர்தமாக உருமாறியது. அதைப் பயன்படுத்திய பிறகு, பண்ணை எங்கும் இடைவெளி இல்லாமல், சிறுசிறு குவியல்களாக மண்புழுவின் எச்சங்கள் தோன்றின. அன்றிலிருந்து உழுவதை நிறுத்தி விட்டோம். மண்புழுக்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம்... மூடாக்குப் போட்டோம். மூடாக்கு போடுவதால் களைகள் இல்லை.

24 மணி நேரமும் மண்புழுக்கள் பூமியைத் துளை போடுவதால்... மண்ணின் பொலபொலப்பு கூடியது. எவ்வளவு மழை பெய்தாலும், பூமி உள்வாங்கிக் கொள்கிறது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாறிய பிறகு மரமும், மண்ணும் புதுப்பொலிவுடன் காட்சி தந்தன. விளைச்சல் கூடியது, செலவு குறைந்தது. இதைத் தவிர... ஒரு விவசாயிக்கு வேறு என்ன வேண்டும்?’’ என ஜெயராம் சொல்லச் சொல்ல ஆச்சர்யத்தின் உச்சிக்குப் போனவராக நின்றார் தாய்லாந்து நாட்டி-லிருந்து வந்திருந்த கம்கடன் பூன்கார்டு.

‘‘நானும் இயற்கை விவசாயம்தான் செய்கிறேன். ஆனால், என்னுடயை வயல் இந்த அளவுக்கு செழிப்பாக இல்லை. இங்கு பார்த்த, கேட்ட விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கின்றன. ஜீவாமிர்தத்தின் செயல்பாடுகள் பிரமாதம். ஊருக்குச் சென்றதும், ஜீவாமிர்த விவசாயத்துக்கு மாறிவிடுவேன். எங்கள் நாட்டில் நெல்தான் பிரதான விவசாயம். செலவே இல்லாமல் நெல் விளைவிக்க முடியும் என்கிற அதிசயத்தை இங்குதான் முதன் முதலாக பார்த்தேன்’’ என்று வியந்து போய்ச் சொன்னார் பூன்கார்டு.

ஆச்சர்யம்... ஆனால் உண்மை!
கொரிய நாட்டைச் சேர்ந்த ஜியோன்சியல் கிம், ‘‘ஒரு பேரல் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு போதும் என்பது வியப்பாக இருக்கிறது. நாங்களெல்லாம் மூட்டை மூட்டையாக ரசாயன உரங்களைக் கொட்டியும், கிடைக்-காத பசுமை... வெறும் ஜீவாமிர்தத்தில் இருக்கிறதே. இதை நம்பவே முடியவில்லை. ஆனால், பசுமைக் கட்டி நிற்கும் நெல், காய்த்துத் தொங்கும் தேங்காய்... இதையெல்லாம் பார்த்த பிறகு... நம்பாமல் இருக்-கவும் முடியவில்லை’’ ஆனந்தக் கூத்தாடினார்.

இந்தோனேஷியவைச் சேர்ந்த விஷ்ணு கெர்மவான், நேபாள நாட்டைச் சேர்ந்த மாயா உள்ளிட்ட அனைவரும் ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகளை தெளிவாகக் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

கடனில்லா, நஞ்சு இல்லா விவசாயத்துக்கு வழிகாட்டிய பாலேக்கர், அதற்கு செயல்வடிவம் கொடுத்து, விளக்கிய நந்தினி ஜெயராம் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெற்று பயணத்தைத் தொடர்ந்த பன்னாட்டுக் குழுவினர்... அடுத்து அதிசயித்து நின்ற பண்ணை...?

1 comment:

  1. Informative...thanks for sharing!!!
    http://agriculturalinformation4u.blogspot.in

    ReplyDelete